தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்றவரை நிறுத்த போராட்டம்.
தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர்
தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் விற்பனையாளர்கள் குடிமைப் பொருட்களின் இருப்பு குறைவு அல்லது அதிகம் மற்றும் போலி பில்களை கண்டறியப்பட்டால் தொடர்புடைய பணியாளர்களிடம் இருமடங்கு அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளதால் அதிக அளவில் அபராதம் விதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பணியாளர்கள் நலன் கருதி இந்த உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும். கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்திட குறியீடு நிர்ணயம் செய்வதை நிறுத்தப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் கடந்த காலத்தில் மாவட்ட தேர்வாணையம் மூலம் நியமனம் செய்யப்பட்ட நியாய விலை கடை விற்பனையாளர்கள் சுமார் 100 கிலோ மீட்டருக்கு அப்பால் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது புதிய விற்பனையாளர்களையும் தேர்வு செய்வதற்கு முன்பாக ஏற்கெனவே பணியில் உள்ள விற்பனையாளர்கள் அருகில் உள்ள நியாய விலை கடைகளுக்கு பணியிட மாறுதல் செய்து அதன் பின்னர் காலி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர். இதில் மாநில பொருளாளர் ஏ.சேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஜி.ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்டபொருளாளர் எம்.அண்ணாமலை, ஒன்றியதலைவர் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.