அஇஅதிமுக சார்பில் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம்

30-க்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்

Update: 2024-10-23 01:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலையில் குளித்தலை நகரம், குளித்தலை மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் செயல்வீரர்கள்- வீராங்கணைகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு குளித்தலை நகர செயலாளர் மணிகண்டன், குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயவிநாயகம் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் திருவிக, மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் மருதூர் திருநாவுக்கரசு, மாவட்ட எம்ஜிஆர் பேரவை செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அதிமுக பொருளாளர் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம். ஆர்.விஜயபாஸ்கர், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என். ஆர். சிவபதி ஆகியோர் கலந்து கொண்டு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் திறம்பட செயல்பட்டு வெற்றி பெற செய்ய வேண்டுமென பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினர். இக்கூட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டனர். அப்போது மாநில பொருளாளரும் முன்னாள் அமைச்சர் ஆன திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், அதிமுக கட்சியினை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 1972 ஆம் ஆண்டு துவக்கி வைத்ததாகவும், அதற்கு முன்பு பேரறிஞர் அண்ணாவின் மேற்கொண்ட அன்பின் காரணமாக திமுக 1967 இல் ஆட்சி கட்டிலில் உட்கார எம்ஜிஆர் தான் காரணம் எனவும், அண்ணாவின் மறைவிற்கு பின்பு யார் அடுத்த முதலமைச்சர் என்று எழுகையில் கருணாநிதி எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டு அவரது தயவினால் தான் முதலமைச்சராக ஆனார் எனவும், ஆனால் பின்னாளில் திமுக கட்சியில் இருந்து எம்ஜிஆர் விலகியத்திற்கும் கருணாநிதி தன் காரணம் என்றும், நம்ப வைத்து துரோகம் செய்யும் பழக்கம் அவரது குடும்பத்திற்கு உண்டானது எனவும், பிறகு 1972ல் அதிமுக கட்சி நிறுவி திண்டுக்கல் இடைத்தேர்தலிலும், அதன்பின்பு தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற முதலமைச்சராக தொடர்ந்தார் எனவும், அவரது மறைவிற்கு பின் அதிமுக இரண்டாக பிளவுபட்ட போதிலும் புரட்சித்தலைவி அம்மா கட்சியை ஒருங்கிணைத்து 1991, 2001, 2011, 16 ஆகிய சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்ற முதலமைச்சராகி மகளிருக்கு எண்ணற்ற பல திட்டங்களை செய்ததாகவும், கனவு தற்போது கலைஞரின் மகன் ஸ்டாலின் ஆட்சியில் அந்தத் திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியதாகவும், 2021 சட்டசபை தேர்தலில் பல பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சியில் அமைந்துள்ளதாகவும், பொய் கூறுவதும் ஊழல் செய்வதும் திமுகவின் வழக்கமான ஒன்று, அம்மா அவர்கள் மறைவிற்கு பின்னர் எடப்பாடியார் அம்மாவின் வழியில் ஆட்சி நடத்தியதாகவும், ஆனால் திமுகவில் கலைஞருக்கு பின் ஸ்டாலின், தற்போது ஸ்டாலினுக்கு அடுத்ததாக உதயநிதியை திமுக தலைமை பதவிக்கு கொண்டு வருவதற்காக இளைஞர் அணி தலைவர் பதவியை கொடுத்தும், துணை முதலமைச்சர் ஆக்கியும் உள்ளதாகவும், திமுக என்றாலே வாரிசு அரசியல் தான், ஆனால் அதிமுகவில் உண்மையாக உழைக்கும் தொண்டனுக்கும் தலைமை பதவி வரும் என்று நிரூபித்த கட்சி அதிமுக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் மூன்று சதவீத வாக்குகள் தான் பல இடங்களில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதாகவும் ஆனால் இதனை இந்த முறை 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும், இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறையை வலுப்படுத்தி நமது கட்சிக்கு அடிப்படை உறுப்பினர் அதிகாரம் செலுத்தும் ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் ஐந்து நபர்களை நியமித்து 50 குடும்பங்களுக்கு ஒருவர் என வீடு வீடாகச் சென்று கடந்த 10 ஆண்டுகால அதிமுக சாதனங்களை எடுத்துரைத்தும், திமுக அளித்த பொய்யான வாக்குறுதிகள் குறித்தும், ஆட்சியின் அவல நிலைகளை குறித்தும் எடுத்துரைக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் தற்போதைய திமுகவில் ஊழல் செய்பவர்கள் தான் தலையில் வைத்து கொண்டாடி வருவதாகவும் அவர்களை தான் மாவீரர் தியாகச் செம்மல் என புகழ்ந்து வருவதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜியை நகைச்சுவையாக கலாய்த்து கூறினார். அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுகவில் அம்மாவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் ஓட்டுநர்கள் நடத்துனர்களை நியமிப்பதற்கு பணம் பெற்றதாக கூறி திமுகவினர் தான் வழக்கு தொடர்ந்ததாகவும், இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி கரூர் மாவட்டத்தில்தான் முதல்வர் ஸ்டாலின் கூறியதாகவும், தற்போது தான் அதற்கு அமலாக்க துறையினரா ல் கைது செய்யப்பட்டு 471 நாட்கள் சிறையில் இருந்ததாகவும், அமைச்சர் பதவியில் இருந்தால் ஜாமீன் கிடைக்காது என நீதிமன்றம் கூறியதை அடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அவர் தற்போது ஜாமீன் வெளிவந்து மீண்டும் அதே துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும், ஜாமினில் வெளியே வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் ஸ்டாலின் மாவீரனே தியாக செம்மலே என வரவேற்றதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து அவருக்கு ஜாமின் வழங்கப்படாததை வடிவேல் காமெடியான வஞ்சரம் மீன் இருக்குங்குறான், வாழ மீன் இருக்குங்குறான், கெண்டை மீன் இருக்குங்குற, சுறா மீன் கூட இருக்குங்கிறான். ஆனா நீங்க கேட்ட ஜாமீன் மட்டும் இல்லைன்னு சொல்றாங்க என்னடா வடிவேலு காமெடி என ஒப்பிட்டு கூறியது அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது இதில் ஏராளமான கழக நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Similar News