மாநில அளவிலான கராத்தே போட்டி

முதலிடம் பிடித்த குளித்தலை புடோக்கான் கராத்தே மாணவர்கள்

Update: 2024-10-23 04:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கராத்தே புடோக்கான் ஃபெடரேஷன் ஆப் தமிழ்நாடு அமைப்பின் சார்பாக மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இப் போட்டிக்கு சிவகாசி யூனியன் துணைத் தலைவரும் திமுக ஒன்றிய செயலாளர் விவேகன்ராஜ் தலைமை வகித்தார். ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் சித்ரா ஜெயந்தி முன்னிலை வகித்தார். போட்டியில் கரூர், திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திண்டுக்கல், தஞ்சாவூர், நாகர்கோயில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் குளித்தலை புடோக்கான் கராத்தே பள்ளியின் சார்பாக பங்கேற்ற மாணவர்களில் 14 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கருப்பு பட்டை சண்டை, கட்டா மற்றும் ஆயுதப் போட்டிகளில் சமுத்திரா முதலிடம் வென்றார். 16 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கருப்பு பட்டை பிரிவில் ராம்நிவாஸ் சண்டைப் போட்டியில் இரண்டாம் இடமும், கட்டா பிரிவில் முதலிடமும் வென்றார். மேலும் ஆண்கள் பிரிவில் விமலேஷ் ரிதன் சண்டைப் போட்டியில் முதலிடம் கட்டா போட்டியில் இரண்டாம் இடம், நிவேதன் சண்டை மற்றும் கட்டா போட்டியில் முதலிடம், ரஜின் குவேரா சண்டைப் போட்டியில் மூன்றாம் இடம் கட்டா போட்டியில் முதலிடம், ஸ்ரீஹரி சண்டைப் போட்டியில் இரண்டாம் இடம் கட்டா போட்டியில் வெண்கலம், முகிலன் சண்டை மற்றும் கட்டா போட்டியில் முதலிடம், சித்தார்த் சண்டைப் போட்டியில் முதலிடம் கட்டா போட்டியில் இரண்டாம் இடம், சஜோன் சண்டை மற்றும் கட்டா போட்டியில் முதலிடம், பெண்கள் பிரிவில் ராணி சண்டை மற்றும் கட்டா பிரிவில் முதலிடம், அட்சயா சண்டைப் போட்டியில் முதலிடம் கட்டா போட்டியில் மூன்றாம் இடம், மேகா ரிதனி சண்டைப் போட்டியில் முதலிடம் கட்டா போட்டியில் இரண்டாம் இடம், நித்யஸ்ரீ சண்டைப் போட்டியில் முதலிடம் கட்டா போட்டியில் இரண்டாம் இடம், பிரதிக்ஷா சண்டை மற்றும் கட்டா போட்டியில் மூன்றாம் இடம் ஆகிய பதக்கங்களை அவரவர்க்குரிய வயது மற்றும் எடைப்பிரிவுகளில் வென்றனர். ஆக மொத்தம் 18 தங்கப் பதக்கங்கள் 6 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கல பதக்கங்கள் ஆகியவற்றை குளித்தலை புடோக்கான் கராத்தே பள்ளி மாணவர்கள் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை குளித்தலை கலைமகள் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் சாய் வித்யாலயா பன்னாட்டு பள்ளிகளின் தாளாளர் திருமதி ரம்யா, கராத்தே புடோக்கான் பெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு தலைவர் எஸ் வி எஸ் முருகேஷ், பொதுச் செயலாளர் சரவணன் மற்றும் பயிற்சியாளர் செந்தமிழ் சக்தி ஆகியோர் பாராட்டினர்.

Similar News