கிருஷ்ணராயபுரம் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், என்.ஆர் சிவபதி சிறப்புரை

Update: 2024-10-24 02:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் அதிமுக சார்பில் . அய்யர்மலையில் உள்ள உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கழக செயல்வீரர்கள்- வீராங்கணைகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் திருவிக, மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் மருதூர் திருநாவுக்கரசு, மாவட்ட எம்ஜிஆர் பேரவை செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் தர்மேந்திரன், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் லதா ரங்கசாமி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம். ஆர்.விஜயபாஸ்கர், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினர். இதில் ஏராளமான கழக நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Similar News