மாபெரும் இலவச மருத்துவ முகாம்.
ஆரணி புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் ஆரணி வின்சென் தே பால் சபை மற்றும் வேலூர் தினேஷ் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமினை நடத்தினர்.
ஆரணி புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் ஆரணி வின்சென் தே பால் சபை மற்றும் வேலூர் தினேஷ் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமினை ஞாயிற்றுக்கிழமை நடத்தினர். இம்முகாமில் மழைக்கால நோய்கள், தடுப்பு மருந்துகள், பொது மருத்துவ ஆலோசனை, எலும்பு மூட்டு, முதுகு தண்டு வலிகளுக்கான சிகிச்சை, நரம்பு தளர்ச்சி மற்றும் நரம்பு சார்ந்த வலி, சர்க்கரை நோய், ரத்த அழுத்த பரிசோதனை, அக்குபஞ்சர் சிகிச்சை, பாத புள்ளிகள் அழுத்தல் சிகிச்சை உள்ளிட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மருத்துவர்கள் டாக்டர் மேஜர் சிவஞானம், டி.விஜயகுமார், ஜாய் ஜாக்குலின், நிலேஷ்மோசஸ், அக்குபஞ்சர் மருத்துவர் பெஸ்கி, சூசைஅருள், மாற்று மருத்துவ நிபுணர் அக்சிலியா ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் இம்முகாமில் ஆரணி நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, சிஎஸ்ஐ ஆயர் ஆசைத்தம்பி, ஆரணி பசுமை இயக்கம் சேர்ந்த மகேந்திரன், ஆரணி அரிமா சங்க தலைவர் எம்.மோசஸ், செயலாளர் ஏ.எம்.முருகானந்த், நகரமன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி, அரவிந்த் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.