கல்லறை திருவிழா.

ஆரணி, சேத்துப்பட்டு - நிர்மலா நகரில் நடைபெற்ற கல்லறை திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மூதாதையர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.

Update: 2024-11-03 06:27 GMT
ஆரணி, சேத்துப்பட்டு - நிர்மலா நகரில் நடைபெற்ற கல்லறை திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மூதாதையர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர். சேத்துப்பட்டு - நிர்மலாநகரில் உள்ள கல்லறை தோட்டத்தில் சனிக்கிழமை மாலை கல்லறை திருவிழா நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் தங்களுடைய மூதாதையர்களின் கல்லறைகளை தூய்மை செய்து வண்ணம் பூசி, கோலமிட்டு, மாலைகள் அணிவித்து பிடித்தமான உணவு வகைகளை படையல் இட்டு மெழுகு வர்த்தி ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலய பங்கு தந்தை விக்டர் இன்பராஜ், உதவி பங்குத்தந்தையர்கள் லியோ அல்போன்ஸ், எழிலரசு ,அலெக்ஸ்ஆகியோர் கலந்துகொண்டு கூட்டு வழிபாடு நடத்தினர். இதில் சேத்துப்பட்டு - லூர்துநகர், நிர்மலாநகர் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News