ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அள்ளித்தரும் நெல்லிக்காய்.

ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அள்ளித்தரும் நெல்லிக்காய். வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர் உஷாராணி.

Update: 2024-11-04 11:34 GMT
கலவை ஆதிபராசக்தி வேளாண் கல்லூரியில் உதவிே பேராசிரியையாக பணிபுரியும் உஷாராணி என்பவர் நெல்லிக்காயின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அள்ளித்தருகிறது என்று கூறினார். மேலும் நெல்லிக்காய் குறித்து கூறியது, நெல்லி யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது.இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஒளவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஒளவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியத்தில் உள்ளது. மருத்துவ குணங்கள் நெல்லியில் இருப்பதாக, சித்த மருத்துவர்களாலும், இயற்கை அறிஞர்களாலும் நம்பப் படுகின்றன. இருப்பினும், இவை மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியன ஆகும். தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும். நெல்லிக்கனி... இயற்கை அன்னை மனிதனுக்கு அளித்த வரப்பிரசாதம். இதனைப் பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத, யுனானி மருத்துவங்களில் பெரிதளவில் பயன்படுத்தி வருகிறார்கள். நெல்லி மரத்தின் ஒவ்வொரு பாகமும் மருத்துவக் குணத்துடன் இருந்தாலும், அதில் காய்க்கும் காய்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்கனி, வியக்கத்தகுந்த கனி. இதில் கரிப்புத்தன்மை தவிர, மற்ற ஐந்து சுவைகளும் உண்டு. நெல்லிக்காயைச் சாப்பிடும்போது ஒருபுறம் இனிப்பு, ஒருபுறம் கசப்பு, துவர்ப்பு என்றிருந்தாலும் புளிப்புச்சுவை மேலோங்கியிருக்கும். நெல்லிக்காயில் வயதான எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை வயஸ்தாபன் பண்புகள் என்று அழைக்கப்படுகின்றன. வஸ்தாபனா என்பது நெல|லிக|காயில| உள்ள மூலப்பொருள் ஆகும், இது சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது மற்றும் நபர் முன்கூட்டிய வயதானதைத் தடுக்கிறது, அதாவது இது வயதான எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. நெல்லிக்காயில் விருஷ்ய சிகிட்சா பண்புகள் உள்ளன, இது கருவுறுதலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது. ஆம்லாவில் உள்ள விருஷ்ய பண்புகள் இனப்பெருக்கம் தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதன் மூலம் குழந்தையின்மை பிரச்சனையை நீக்க உதவுகிறது. ஆயுர்வேதத்தின் எட்டு முக்கிய சிறப்புகளில் விருஷ்ய சிகித்சாவும் ஒன்றாகும். இது ஆண் மற்றும் பெண் கருவுறுதலை அதிகரிக்கும் மற்றும் ஒரு நபரை பாலியல் சக்தியாகவும் திறமையாகவும் மாற்றும். யாராவது கருத்தரிக்க முயற்சித்தால், அவர் அதிக நெல்லிக்காயை உட்கொள்ளலாம். நெல்லிக்காயில் திரிதோஷ பண்புகள் உள்ளன, இது மூன்று தோஷங்களையும் சமநிலைப்படுத்த உதவுகிறது, அதாவது வாத, பித்த மற்றும் கபா. இதன் நுகர்வு பார்வையை மேம்படுத்துகிறது, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், எந்த வயதினரும் இதை உட்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், நல்லது. • நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும். • நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும். • நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம். • நல்ல நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும். • சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். • கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் சிறந்ததாக இருக்கும். • மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும், கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால், சரிசெய்துவிடலாம். • முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். • உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும் நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும். • இதயம் பலவீனமாக இருப்பவர்கள், தினமும் நெல்லிக்காய் சாற்றை அளவாக குடித்து வந்தால், இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்யலாம். • நெல்லிக்காய் ஜூஸ் சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. குறிப்பாக முகப்பரு, பிம்பிள் உள்ளவர்கள், அதனை குடித்தால் போக்கிவிடலாம். • நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், கண் பார்வை அதிகரிக்கும். • நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, முதுமைத் தோற்றமானது விரைவில் வெளிப்படுவதை தடுக்கும். இவ்வாறு பல மருத்துவ குணங்களை கொண்ட நெல்லிக்காயை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்று கூறினார்.

Similar News