பால் கேனில் தண்ணீர் ஊற்றி மோசடி, வேனை மறித்த பொதுமக்கள்

நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவிப்பு

Update: 2024-11-06 08:18 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மயிலாடும்பாறை கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் கடந்த 27 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் 50 க்கு மேற்பட்ட நுகர்வோர்கள் காலை மாலை இருவேளையும் பால் உற்பத்தி செய்து வழங்கி வருகிறார்கள். நுகர்வோர் வழங்கும் பால் கூட்டுறவு சங்க செயலாளர் பரிசோதனை செய்யப்பட்டு 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேனில் பால் வண்டியில். ஏற்றப்பட்டு வருகிறது. பால் ஏற்றிச் செல்லும் வேன் எருமநாயக்கன்பட்டி, செம்மேடு, பணிக்கம்பட்டி, மயிலாடும்பாறை, கணேசபுரம், நடுப்பட்டி, நடுப்பட்டி பாலம் ஆகிய பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் சேகரிக்கப்பட்ட பால் கேன் வேனில் ஏற்றி திருமலை ரெட்டியபட்டியில் செயல்பட்டு வரும் பால் குளிரூட்டப்பட்டு வரும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து லாரி மூலம் சென்னையில் உள்ள ஆவின் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மயிலாடும் பாறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திலிருந்து ஏற்றி செல்லும் பால் வேன் டிரைவரான சூர்யா என்பவர் அருகில் உள்ள நடுப்பட்டி பால் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் செந்தூரமணி என்பவர் காலை மாலை இருவேளையிலும் மயிலாடும் பாறையில் இருந்து கொண்டுவரப்படும் பாலில் தினசரி 20 லிட்டர் பால் எடுத்துக்கொண்டு அதற்கு ஈடாக தண்ணீரை நிரப்பி உள்ளார். இந்த முறைகேடு அறிந்த நுகர்வோர்கள் இன்று மயிலாடும்பாறைக்கு பால் கேன் ஏற்ற வந்த வேனை மறித்து டிரைவர் சூர்யாவிடம் கேட்டபோது மயிலாடும்பாறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் சேகரிக்கப்பட்ட பாலில் மட்டும் தண்ணீர் கலந்து முறைகேடு செய்தது தெரியவந்தது. மயிலாடும்பாறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் நுகர்வோர்கள் சங்க செயலாளர் பால் வேனை சிறைபிடித்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட உதவி பொது மேலாளர் துரைஅரசன் தலைமையில் விரிவாக்க அலுவலர் சேகர், கால்நடை மருத்துவர் முருகன், கரூர் மாவட்ட கரூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் துணை பதிவாளர் கணேசன் ஆகியோர் நேரில் வந்து வேன் டிரைவர் சூர்யாவுடன் விசாரணை மேற்கொண்டனர். வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ள பால் கெட்டுப் போகாமல் தடுக்க உடனே பால் குளிரூட்டும் மையத்திற்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டதன் பேரில் சேகரிக்கப்பட்ட பால் கேன்கள் அனைத்தும் திருமலை ரெட்டியப்பட்டியில் உள்ள பால் குளிரூட்டும் மையத்திற்கு மாற்று டிரைவர் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து விசாரணை அமைக்கப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்டுள்ள நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

Similar News