தொட்டியத்தில் போராட்டம் வெற்றி பெற்றதற்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை

ஐஜேகே மாநில பொதுச் செயலாளர்கள் பங்கேற்பு

Update: 2024-11-10 10:28 GMT
கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி தொட்டியத்தில் ஐஜேகே அகில இந்திய தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து தலைமையில் நடைபெற்ற போராட்டம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதற்காக கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி. மலை காமாட்சி அம்மன் திருக்கோவிலில் போராட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து வேண்டுதல் நிறைவேற்றிட அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிறப்பு விருந்தினராக மாநில துணை பொது செயலாளர்கள் உதயசூரியன், ஆனந்த முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் ஐஜேகே கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் டி.கே.தனசேகரன், தொட்டியம் நிர்வாகி சூர்யபாலா மற்றும் ஐஜேகே நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது. நாமக்கல் பாராளுமன்ற பொறுப்பாளர் கே. தங்கவேல் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.

Similar News