சட்டவிரோதமாக குப்பை கொட்டிய வாகனத்திற்கு அபராதம் விதிப்பு

காவிரி கரையோரம் குப்பை கொட்டிய டிராக்டர் வண்டிக்கு 6000 அபராதம் விதிக்கப்பட்டது

Update: 2024-11-29 12:27 GMT
பள்ளிபாளையம் அடுத்துள்ள களியனூர் கிராமத்தில் ஆவத்தி பாளையம் காவிரி கரையோர பகுதி அமைந்துள்ளது… இங்கு இரவு நேரத்தில் வெளிநபர்கள் குப்பைகளை கொட்டுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், வெள்ளிக்கிழமை அன்று பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து குப்பை கழிவுகளை ஏற்றிக்கொண்டு,தனி நபர்கள்  டிராக்டர் மூலமாக ஆவத்தி பாளையம் காவிரி கரையோரம் குப்பைகளை கொட்டுவதாக களியனூர் பஞ்சாயத்து பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு விரைந்த பொது மக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு ஏதுவாக நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை சிறை பிடித்தனர் . இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனை அடுத்து  அனுமதி இன்றி நகராட்சி பகுதியிலிருந்து பஞ்சாயத்து பகுதிக்கு குப்பைகளை முறைகேடாக கொண்டு வந்து கொட்ட முயன்றதாக ₹6 ஆயிரம் ரூபாய் அபராதம் களியனூர் பஞ்சாயத்து நிர்வாகத்தால்  டிராக்டர் வண்டிக்கு விதிக்கப்பட்டது… இனிவரும் காலங்களில், நகராட்சி பகுதியில் மற்றும் வெளிப்புறப் பகுதியில் இருந்து  களியனூர் கிராமத்திற்குள் குப்பைகளை கொண்டு வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என களியனூர் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர் …

Similar News