அரசு மதுபான கடையை அகற்றக் கோரி சாலை மறியல் போராட்டம்
திடீர் சாலை மறியல் போராட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு
பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிபாளையம் வட்டார பகுதி முழுவதும் அரசு நிர்ணயித்த நேரத்தை காட்டிலும், அதிகாலை நேரத்திலேயே மதுபான கடை பார் செயல்பட்டு வருகிறது. மேலும் சந்து கடைகள் மூலமாக சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாகவும், இதன் காரணமாக ஏழை எளிய தொழிலாளர்கள் பாதிப்பு உள்ளாவதாகவும் கூறி அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில கழக கூட்டுறவு செயலாளர் குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஜீவா செட் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .சட்டவிரோதால் சந்து கடைகளை அகற்ற வேண்டுமென சாலை மறியல் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனை அடுத்து பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களை சமரசம் செய்தார் ..இதன் காரணமாக அந்த சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.