விளைப்பொருள்களை ஏற்றுமதி செய்ய மானியம். ஆட்சியர் அழைப்பு.

விளைப்பொருள்களை ஏற்றுமதி செய்ய மானியம். ஆட்சியர் அழைப்பு.

Update: 2024-12-02 13:06 GMT
விளைப்பொருள்களை ஏற்றுமதி செய்ய மானியம். ஆட்சியர் அழைப்பு. விவசாயிகள் & உழவர் உற்பத்தியாளர் ள் தங்கள் விளைப்பொருள்களை ஏற்றுமதி செய்வதற்காக மானியம் வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,விவசாயிகள் & உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் விளைப்பொருட்களை ஏற்றுமதி மேற்கொள்வதற்காக தமிழக அரசு மானியத்தொகை ரூ.15,000-வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மா, தென்னை, சிறுதானியங்கள், முருங்கை, மஞ்சள், சின்னவெங்காயம் மற்றும் வெள்ளரி போன்றவற்றைப் பயிரிடும் ஆர்வமுள்ள விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறவனங்கள், 01.04.24 க்கு பிறகு ஏற்றுமதி தொடர்பான சான்றிதழ்கள், இறக்குமதி, ஏற்றுமதி குறியீடு(IE Code), பதிவு & உறுப்பினர் சான்றிதழ் டிஜிட்டல் கையொப்பம்,FSSAI மத்திய உரிமம், போன்றவற்றின் ரசீதுகளை சமர்ப்பித்தால், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம்(DGFT), வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் ஏற்றுமதி ஆணையம்(APEDA) போன்ற ஏற்றுமதி நிறுவனங்களின் ஆலோசனையின் பேரில் அதிக பட்சம் ரூ.15000/- பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். எனவே, ஏற்றுமதியில் ஆர்வமுள்ளவர்கள் வேளாண் துணை இயக்குநர், வேளாண் வணிகம், 9442556138 & வேளாண்மை அலுவலர்களை 9500416678, 9942286337, 9489508735 தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெறலாம் என ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Similar News