காமக்கூர் ஏரியின் கரை லேசாக உடைந்து உடனடியாக பலப்படுத்தப்பட்டதால் விபரீதம் தவிர்ப்பு.

ஆரணி, டிச 7 ஆரணி அடுத்த காமக்கூர் ஏரியின் கரை லேசாக விரிசல் விட்டு தண்ணீர் நிலங்களில் வெளியேறியதை தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக கரையை பலப்படுத்தியதால் பெரிய விபரீதம் தவிர்க்கப்பட்டது.;

Update: 2024-12-07 08:41 GMT
ஆரணி அடுத்த காமக்கூர் ஏரியின் கரை லேசாக விரிசல் விட்டு தண்ணீர் நிலங்களில் வெளியேறியதை தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக கரையை பலப்படுத்தியதால் பெரிய விபரீதம் தவிர்க்கப்பட்டது. ஆரணி அடுத்த காமக்கூர் ஏரி நிரம்பி கோடி விடும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை ஏரிக்கரையில் லேசார விரிசல் ஏற்பட்டு தண்ணீர் அருகில் உள்ள நிலங்களில் நிரம்பியது. தகவல் அறிந்த ஊராட்சிமன்றதலைவர் குப்புசங்கர் தலைமையில் ஊர் பொதுமக்கள் கரையில் மணல் மூட்டைகளை அடுக்கி பெரிய விபரீதத்தை தடுத்தனர். பின்னர் தகவல் அறிந்த பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு டிராக்டர்களில் மொரம்பு மண்ணை கொண்டு வந்து ஜேசிபி மூலம் கரையை பலப்படுத்தினர். இதனை பொதுப்பணித்துறையின் உதவிசெயற்பொறியாளர்கள் செல்வராஜ், ராஜகணபதி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மேலும் ஏரிப்பாசன சங்க தலைவர் சங்கர், அமமுக ஒன்றியசெயலாளர் புருஷோத் மற்றும் தன்னார்வலர்கள் உடனிருந்து கரையை பலப்படுத்தி விபரீதத்தை தவிர்த்தனர்.

Similar News