ஆரணியில் அனைத்து கட்சியினர் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

ஆரணியில் அம்பேத்கர் நினைவு தினம் முன்னிட்டு அதிமுக, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, உள்ளிட்ட கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.;

Update: 2024-12-07 08:44 GMT
ஆரணியில் அம்பேத்கர் நினைவு தினம் முன்னிட்டு அதிமுக, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, உள்ளிட்ட கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திமுக. ஆரணியில் அம்பேத்கர் நினைவு தினம் முன்னிட்டு திமுக சார்பில் நகர துணை செயலாளர் பொன் சேட்டு தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் மாலை அணிவித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏ.எம்.ரஞ்சித், அலெக்ஸ், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செந்தில்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி. தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைசெயலாளர் ஜெயராணிரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் எம்.சுந்தர், துரை மாமது, மோகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் புஷ்பராஜ், நிர்வாகிகள் முள்ளிப்பட்டு ரவி, பாலமுருகன், மாலா, சபாபதி, இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக. ஆரணியில் அம்பேத்கர் நினைவு தினம் முன்னிட்டு அதிமுக சார்பில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் அசோக்குமார், மாவட்ட பேரவை செயலாளர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் ஜி.வி.கஜேந்திரன், ஜெயப்பிரகாஷ், மாவட்ட இணை செயலாளர் வனிதா சதீஷ், நிர்வாகிகள் அக்ராபாளையம் ஏ.இ.சண்முகம், கலைவாணி, ஏ.ஜி.ஆனந்தன், எஸ்.பி.சரவணன், இரும்பேடு வேலு, சித்தேரி ஜெகன். நகர்மன்ற உறுப்பினர்கள் விநாயகம், சுதா குமார், சதீஷ், சிவக்குமார், ஏ.ஜி.மோகன், குமரன், வெங்கடேசன், சசிகலா சேகர், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ். ஆரணியில் அம்பேத்கர் நினைவு தினம் முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் எஸ்.பிரசாத் தலைமையில் எஸ்சி,எஸ்டி பிரிவு மாவட்டத் தலைவர் நேத்தப்பாக்கம் முருகன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் அருணகிரி, ராமலிங்கம், தெள்ளூர் சேகர், நகர்மன்ற உறுப்பினர் ஜெயவேலு, வட்டார தலைவர்கள் வந்தா மணி மல்சூர் இளங்கோவன் எஸ் எஸ்சி எஸ்டி நகர தலைவர் சௌந்தர், எஸ்சி.எஸ்டி மாவட்ட நிர்வாகி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் விடுதலை சிறுத்தை, புரட்சி பாரதம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Similar News