காங்கேயம் அருகே சின்னாயிபுதூர் கிராமத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பழனி ஆண்டவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டு பகுதியான சின்னாயிபுதூர் கிராமத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பழனி ஆண்டவர் மற்றும் மூர்த்திகளுக்கு நூதன முறையில் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்;

Update: 2024-12-08 15:15 GMT
காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டு பகுதியான சின்னாயி புதூரில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆகிய திருக்கோயில்களில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது. மேலும் கடந்த 5ம் தேதி வியாழக்கிழமை கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்வும், 6ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தியுடன் துவங்கியது. நேற்று 7ம் தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, தேவதா அனுஞ்சை, தனபூஜை, ஷோடச கணபதி ஹோமம், ஸ்ரீ சக்கர ஹோமம், ஸ்ரீ துர்கா சூக்த ஹோமம், நவகிரக ஹோமம், அஸ்திர ஹோமம், த்ரவ்ய ஹுதி , பூர்ணகுதி, உபச்சாரம், கோ பூஜை, தீபாரதனை ஆகியவை முடிந்தவுடன் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு மங்கள இசை விண்ணுலக நாயகர் முதல் பல பூஜை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகம், வாஸ்து பூஜை, அங்குராப்பணம், ரஷாபந்தனம், காலகர்ப்பணம், யாகசாலை பிரவேசம், முதற்காலை பூஜை, அக்னி காரியம்,த்ரவ்ய ஹுதி,  பூர்ணகுதி, தீபாரணை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மேல் முளைப்பாலிகை எடுத்து வருதல் நிகழ்வும் நடைபெற்றது. இன்று காலை 4 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை துவங்கப்பட்டது. அதில் விக்னேஸ்வர பூஜை பிம்பசுத்தி தீப ஸ்தாபனம் தேவதாரட்சர் பந்தனம், யாக மண்டபத்தில் அருள் நிறை கணபதிக்கு பூஜை நாடி சந்தானம் ஸ்பர்சாகுதி,திரவ்யாஹீதி, பூர்ணா குதி, தீபாரணை, யாத்ரா தான சங்கல்பம் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேக திருவிழாவை காங்கேயம் பகுதியில் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 7:00 மணி முதல் அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக திருவிழா ஏற்பாடுகளை சின்னாய்பதூர் பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

Similar News