திருமலைசமுத்திரம் ஏரியில் கோடி விடும் நிகழ்ச்சி.
ஆரணி கொசப்பாளையம் திருமலைசமுத்திரம் ஏரி நிரம்பி கோடி விடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.;
ஆரணி கொசப்பாளையம் திருமலைசமுத்திரம் ஏரி நிரம்பி கோடி விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரணி கொசப்பாளையம், திருமலைசமுத்திரம் ஏரியில் 2 வருடங்கலுக்கு பிறகு ஏரி நிரம்பியது. பின்னர் நடைபெற்ற கோடி விடும் நிகழ்ச்சியில் ஏரி தண்ணீர் வெளியேறும் இடத்தில் பூஜை செய்யப்பட்டது. இதில் நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி கலந்துகொண்டு மலர்களை தூவி வழிபட்டார். உடன் ஒன்றிய செயலாளர்கள் மாமது, மோகன், நகர மன்ற உறுப்பினர்கள் கார்த்திக், கிருபாசமுத்ரிசதீஷ், சசிகலாசேகர், ஏரிப்பாசன சங்க தலைவர் பச்சையப்பன், முன்னாள் கவுன்சிலர் ராமு கலந்து கொண்டனர்.