ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கிய பேருந்து
ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கிய பேருந்து;
மதுராந்தகம் ஏரியில் இருந்து வெளியேறி வரும் உபரி நீர் 7000 கன அடியாக உள்ள நிலையில் நேற்று கிளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கிய தனியார்பேருந்து மீட்பதில் இரண்டாவது நாளாக சிக்கல். செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மதுராந்தகம் ஏரி வழியாக 7000 கன அடி தண்ணீர் தற்போது கிளியாற்றின் வழியாக கடலில் கலக்கிறது... இந்த நிலையில் நேற்று 50 பயணிகளுடன் தச்சூரிலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து சகாய நகர் அருகே கிளி ஆற்றில் சிக்கியது. இதன் காரணமாக பேருந்து மீட்பதில் இன்று இரண்டாவது தண்ணீர் ஒடியாத நிலையில் பேருந்து மீட்கப்படாமல் கிளியாற்றில் சிக்கியுள்ளது.. மேலும் தண்ணீர் குறைந்தால் மட்டுமே பேருந்து நெருங்க முடியும் மீட்பு பணியை துவங்க முடியும் என தெரிவிக்கின்றனர்..