பிரபல ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது
திண்டுக்கல்லில் பிரபல ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது
திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே மோகன் என்பவரிடம் உதயா(எ)உதயகுமார் என்பவர் பட்டாக்கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து மோகன் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை செய்து பறித்தது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். உதயா(எ)உதயகுமார் மீது மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலைமுயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 10 மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இவரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்.பி.பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பூங்கொடி அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமைதான போலீசார் உதயகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.