உண்ணாமலைகடை: மகாவிஷ்ணு கோவிலில் சிலை உடைப்பு 

மார்த்தாண்டம்

Update: 2024-12-21 11:02 GMT
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைகடை நாராயணபுரத்தில் தமிழ்நாடு இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ மகாவிஷ்ணு திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை மற்றும் மாலை வேலைகளில் தினசரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி,  கிருத்திகை, சஷ்டி தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுது உண்டு. குமரியை சேர்ந்த ஏராளம் பக்தர் வழிபட்டு வருகிறார்கள்.       இந்த கோயிலில் நான்கு பகுதிகளிலும் சுற்றுசுவர் உண்டு. ஆனாலும் கடந்த ஆண்டு கோயிலில் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து தூக்கி சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், நேற்று நள்ளிரவு சுவர் எழுதி குதித்து உள்ளே புகுந்த நபர் ஒருவர் அங்கு இருந்த நாகர் சிலை உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.        இது குறித்து கோவில் மேல் சாந்தி குமார் என்பவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் உடைத்ததாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அந்த நபரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News