அரக்கோணம் ரயில் நிலையத்தில் விசிகவினர் போராட்டம்!
ரயில் நிலையத்தில் விசிகவினர் ரயில் மறியல் போராட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் 1வது நடைமேடையில் இன்று திடீரென தண்டவாளத்தில் இறங்கி விடுதலை சிறுத்தை கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாராளுமன்றத்தில் சட்ட மேதை அம்பேத்கரை அவதூறாக பேசிய பாஜக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு.