திமுக கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை நிர்வாகிகள் அறிமுக கூட்டம்.
திருவாரூர் மாவட்ட திமுக கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டம்.
திருவாரூர் மாவட்டம் திமுக ஒன்றியம் மற்றும் நகர,பேரூர் கழக கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவையின் சார்பாக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் ஆனது திருவாரூர் வர்த்தக சங்க மண்டபத்தில் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை மாவட்ட நிர்வாகி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கலைவாணன், திருவாரூர் நகர செயலாளர் வாரை.பிரகாஷ், கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர், திருவாரூர் ஒன்றிய குழுத் தலைவர் புலிவலம்.தேவா உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் திமுக கலை இலக்கியப் பண்பாட்டு பேரவையின் புதிய நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.