நேத்தப்பாக்கம் பஜனை கோயில் இருந்த இடத்தில் அம்மன் கோவில் கட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆரணி கோட்டாட்சியரிடம் மனு.

Update: 2024-12-24 01:18 GMT
ஆரணி அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தில் உள்ள ராமர் பஜனை கோயிலை இடித்து விட்டு அம்மன் கோயில் கட்ட இருக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் அப்பகுதி மக்கள் புகார் மனு கொடுத்தனர்‌. ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்வு முகாமில் 83 பேர் மனு கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும் இதில் ஆரணி அடுத்த நேத்தப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, நேத்தப்பாக்கம் கிராமத்தில் புஞ்சை சர்வே எண் 302/1 ல் ராமர் பஜனை ஆலயம் என்று அரசு ஆவணத்திலேயே பதிவாகியுள்ளது. இந்நிலையில் இங்கு கட்டப்பட்டிருந்த ராமர் பஜனை ஆலயம் இடிக்கப்பட்டு தற்போது அம்மன் கோயில் கட்டுவதற்கு வஜ்ஜிரம் மகன் வி. ஞானப்பிரகாசம் என்பவர் ஏற்பாடு செய்து வருகிறார். மேலும் அப்பகுதி மக்கள் அனைவரும் சேர்ந்து பஜனை கோயில் இருந்த இடத்தில் பஜனை கோயில்தான் கட்ட வேண்டும். மேலும் நாங்கள் மூன்று தலைமுறைகளாக இக்கோயிலில் வழிபாடு செய்து வருகிறோம் என்றும் கூறி ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார். மேலும் இம்முகாமில் பட்டா வழங்க கோரி, பட்டா மாற்றம், கணினி திருத்தம், ஆதரவற்ற விதவைச் சான்று, பட்டா ரத்து, நில அளவை, பரப்பு திருத்தம், பட்டா வழங்க ஆட்சேபனை, ஆக்கிரமிப்பு அகற்றம், நில அபகரிப்பு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சுடுகாட்டு பாதை, மகளிர் உரிமைத்தொகை, அரசு வீடு கேட்டும், சிமெண்ட் சாலை, சத்துணவு கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி, வேளாண் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறித்து 83 பேர் மனு கொடுத்தனர். இம்மனுக்களை கோட்டாட்சியர் அந்தந்த துறைகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Similar News