ஆரணி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு.
ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நெல்லை நீதிமன்ற வாசலில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டதன்காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸீர் பாதுகாப்பு போடப்பட்டது. இதன் காரணமாக ஆரணி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாரும், பிஸ்டலுடன் உள்ள போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.