தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள கீழ கடையம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் உடல் ரயில் மோதி இரண்டு துண்டான நிலையில் கிடப்பதாக ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் யார்? எந்த ஊரைச் சார்ந்தவர்? ரயில் மோதி அவர் இறந்தாரா? அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி ரயில்வே போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடலை ரயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.