விவசாய குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-12-27 10:37 GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை (24.12.2024) 889.2 மி.மீ.மழை பெறப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 172.66 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் வரை நெல் 8219 எக்டர், சிறுதானியங்கள் 77791 எக்டர், பயறு வகைகள் 11226எக்டர், எண்ணெய் வித்துக்கள் 29376 எக்டர், பருத்தி 1759 எக்டர் மற்றும் கரும்பு 8378 எக்டர் என மொத்தம் 136749 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 542 எக்டர், கத்திரி 314 எக்டர், வெண்டை 277 எக்டர், மிளகாய் 211 எக்டர், மரவள்ளி 3260 எக்டர், வெங்காயம் 3321 எக்டர், மஞ்சள் 1945 எக்டர் மற்றும் வாழை 2321 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் யூரியா 2297 மெ.டன், டிஏபி 796 மெ.டன், பொட்டாஷ் 1403 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 488 மெ.டன், காம்ப்ளக்ஸ் 2745 மெ.டன் என்ற அளவிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நுண்ணீர் பாசனத் திட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கு 1173.61 எக்டர் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் 4,73,245 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். இதில் 4,53,475 விவசாயிகளுக்கு ரூ.296.25 கோடி பயிர் இழப்பீட்டுத் தொகையாக இதுநாள் வரை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 19,770 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை தகுதியின் அடிப்படையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டு 2000 ஏக்கர் நெல் சாகுபடி பரப்பிற்கு துத்தநாக சல்பேட்(znso4) ரூ.250 / ஏக்கர் மானிய விலையில் விநியோகம் செய்திட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், தனி மாவட்ட வருவாய் அலுவலர், சிப்காட், மா.க.சரவணன், வருவாய் கோட்டாட்சியர்கள் ஆர்.பார்தீபன் (நாமக்கல்), .சே.சுகந்தி (திருச்செங்கோடு), வேளாண்மை இணை இயக்குநர் பெ.கலைச்செல்வி, தோட்டக்கலைத் துணை இயக்குநர் மா.புவனேஷ்வரி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திருமதி.எஸ்.பத்மாவதி, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம்) நாசர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) க.இராமச்சந்திரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News