போடி துணை கண்காணிப்பாளராக செள. சுனில் நியமிக்கப்பட்டுள்ளார்
போதை பொருள் ஒழிப்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் . மக்கள் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும்;
போடி காவல் துணை கண்காணிப்பாளராக சௌ.சுனில் போடி காவல் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து சௌ.சுனில் போடி காவல் துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். வியாழக்கிழமை அவர் போடி காவல் துணை சரகத்தில் உள்ள போடி நகர், புறநகர், தேவாரம், கோம்பை, சின்னமனூர் காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். புதிதாக பொறுப்பேற்ற போடி காவல் துணை கண்காணிப்பாளர் சௌ.சுனிலுக்கு காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவன தொண்டு நிறுவன அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.