தமிழ்நாடு முதல்வர் காணொலிக்காட்சி வாயிலாக நாளை (டிச.30) காலை 10 மணியளவில், புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் நிகழ்ச்சியினை தொடங்கி வைக்க உள்ளார். புதுகை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி ஆகியோர், மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.