வாழ்த்து அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் Artificial intelligence (AI) தொழில் நுட்பத்தின் மூலம், இசை முரசு நாகூர் E.M.ஹனிஃபா அவர்களின் நூற்றாண்டு வருடத்தில் அவரின் குரலை மீட்டெடுத்து, கவிஞர் யுகபாரதியின் வரிகளில், சாம் சி.எஸ். இசையில், 'ஹபீபி' படத்தில் பாடல் ஒன்றை இணைத்துள்ள மீரா கதிரவன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு பாராட்டு என தெரிவித்துள்ளார்.