காலசமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வரும்முன்காப்போம் திட்ட மருத்துவ முகாம்
ஆரணி, டிச 29. ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே காலசமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.;
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே காலசமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஒன்றியக்குழுத்தலைவர் சாந்திபெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆர்.வி.சேகர் முன்னிலை வகித்தார். சமுதாய சுகாதார செவிலியர் ஷீலா வரவேற்றார். கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மருத்துவ பெட்டகம் குழந்தை நல பரிசு பெட்டகங்களை வழங்கினார். முகாமில் கண், காது, மூக்கு, பல், தொண்டை, வயிறு, நீரிழிவு, காசநோய், தொழு நோய், இதய நோய், பால்வினை நோய், மகப்பேறு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இசிஜி ஸ்கேன், ரத்தம், சிறுநீர் பரிசோதனைகளும் நடந்தன. காப்பீடு திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான நோயாளிகளை அழைத்து சென்று அறுவை சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் அருண்பிரசாத் நன்றி கூறினார்.