இஞ்சிமேடு பெரிய மலை சிவாலயத்தில் சனி பிரதோஷ விழா.

பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு பெரிய மலையில் உள்ள திருமணிசேரை உடையார் சிவாலயத்தில் நடைபெற்ற சனி மகா பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2024-12-29 15:25 GMT
பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு பெரிய மலையில் உள்ள திருமணிசேரை உடையார் சிவாலயத்தில் நடைபெற்ற சனி மகா பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெரணமல்லூர்அடுத்த இஞ்சிமேடு பெரிய மலையில் உள்ள திருமணி நாயகி சமேத திருமணிச் சேறை உடையார் சிவாலயத்தில் மார்கழி மாத மகா சனி தேய்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது. முன்னதாக நந்தியம்பெருமான்,பளிங்கு சக்தி விநாயகர்,வள்ளி, தெய்வானை, முருகன்,தட்சிணாமூர்த்தி சண்டிகேஸ்வரர் அகத்தியர்,திருமணி நாயகி திருமணச்சேரி உடையார் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ரிஷப வாகனத்தில் உற்சவமூர்த்திகள் திருமணி நாயகி திருமணிசேறை உடையார் அலங்கார ரூபத்தில்பக்தர்கள் சிவப்பாராயணம் பாடியபடிகோவிலின் பிரகாரத்தில் வீதி உலா வந்தனர். சிவயோகி ஐ.ஆர்.பெருமாள் சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் சென்னை, காஞ்சிபுரம், ஆரணி ,வேலூர், செய்யார், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை உள்பட பல்வேறு பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News