காட்டுநாயக்கன் பழங்குடி மக்களின் பிரதான கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டம் நடத்த சேத்துப்பட்டில் தீர்மானம்.

சேத்துப்பட்டில் நடைபெற்ற காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில குழு கூட்டத்தில் நான்கு மாவட்டங்களில் பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரே நாளில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2024-12-29 15:33 GMT
சேத்துப்பட்டில் நடைபெற்ற காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில குழு கூட்டத்தில் நான்கு மாவட்டங்களில் பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரே நாளில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேத்துப்பட்டு பழம்பேட்டையில் காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் தனியார் மகாலில் மாநில தலைவர் சசிகலா பழனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் தோழர்.அய்யனார் மாநிலம் தழுவிய காட்டுநாயக்கன் பழங்குடி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துதல், சிபிஎம் மாநில மாநாட்டில் காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் பெருவாரியாக பங்கேற்க முடிவு செய்யப்பட்டது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும், தமிழ்நாடு ஆன்றோர் மன்ற உறுப்பினருமான இரா.சரவணன் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில குழு முடிவுகளை அறிவித்து பேசுகையில் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் காட்டுநாயக்கன் பழங்குடி மக்களின் பிரதான கோரிக்கைகளான சாதிச் சான்று பெறுதல், வீட்டுமனை பட்டா பெறுதல், பழங்குடியினர் தொகுப்பு வீடு ஆகியவற்றை வலியுறுத்தி ஒரே நாளில் அனைத்து மாவட்டங்களிலும் காட்டுநாயக்கன் பழங்குடி மக்களின் கலாச்சாரத்தோடு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் எஸ்.பழனி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் எம்.மாரிமுத்து, காட்டுநாயக்கன் சங்கத்தின் மாநில பொருளாளர் தயாளன், மாநில துணைத் தலைவர் முருகன், மாநில துணை செயலாளர் வெங்கடேசன், மகளிர் அணி செயலாளர் உமா மற்றும் மாநில உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News