ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் எல் ஜெயசுதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் எல் ஜெயசுதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இதில் மாவட்ட அவைத் தலைவர் அ.கோவிந்தராஜன், நகர செயலாளர் அசோக்குமார், ஜெ பேரவை மாவட்ட செயலாளர் பாரி பி.பாபு ஒன்றிய செயலாளர்கள் ஜி.வி.கஜேந்திரன், வழக்கறிஞர் க.சங்கர், ஜெயபிரகாசம், திருமால், விமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.