சிறகுகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தொடக்கம் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மா. மதிவேந்தன்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நலன் காத்திட “சிறகுகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தொடக்கம்” இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து சிறப்பு கூட்டத்தில் விளக்க உரை ஆற்றினார்கள்.;
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் , சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), மேயர் து.கலாநிதி அவர்கள் ஆகியோர் முன்னிலையில், அரசின் திட்டங்கள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளை முழுமையாக சென்றடைவதை உறுதி செய்திடும் வகையிலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நலன் காத்திட “சிறகுகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தொடக்கம்” இயக்கத்தின் சார்பில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் பயின்று வரும் 30 மாற்றுத்திறனாளி மாணவியர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து சிறப்பு கூட்டத்தில் விளக்க உரை ஆற்றினார்கள். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தாவது, முத்தமிழறிஞர் கலைஞர் மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகவும், மாற்றுத்திறனாளிகளின் திறன்களை அங்கீகாரித்து மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தையினை உருவாக்கினார்கள். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தனியே ஒரு துறையை ஏற்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் உரிமையை பாதுகாத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆவார்கள். அதோடு மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினை தனது கட்டுப்பாட்டில் வைத்து, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வதாரத்தை மேம்படுத்த மாற்றுத்திறனாளிகள் நலவாரியம், மாத உதவித் தொகை, பராமரிப்புத் தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, மேற்படிப்பு பயில உதவித் தொகை, இலவச பேருந்து பயணம், மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்தில் தனியாக இருக்கை இது போன்று எண்ணற்ற திட்டங்களை முத்தமிழறிஞர் கலைஞர் செயல்படுத்தியுள்ளார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் மாற்றுத்திறனாளிகளின் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு இலவசமாக இலவச பேருந்து பயண சலுகை, திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம், கடைக்கோடியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேவையான நலத்திட்ட உதவிகளை பெறுவதை உறுதி செய்திடும் நோக்கில் உரிமைகள் திட்டம், மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் தாழ்வுதளம், போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆவார்கள்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, நல வாரிய சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம் (UDID), கல்வி உதவித்தொகை, பார்வைத்திறன் குறையுடையோருக்கான வாசிப்பாளர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்பற்றோர் நிவாரண உதவி தொகை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு சுய வேலைவாய்ப்பு பரிந்துரையுடன் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிகபட்சம் ரூ.25,000 மானியம், மாற்றத்திறனாளி குழந்தைகிளன் பெற்றோருக்கு மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம், வங்கிகளில் வட்டி இல்லா கடன் உதவி, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும் (UYEGP) திட்டம், பாரத பிரதமரின் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும் (PMEGP) திட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் ஆவின் விற்பனை மையம் ரூ.50,000 மானியம், 40 விழுக்காட்டிற்கு மேல் உடைய அறிவுசார் குறைபாடுடையோருக்கான பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.2,000/-, 75 விழுக்காட்டிற்கு மேல் உடைய கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ 2000/-, 40 விழுக்காட்டிற்கு மேல் உடைய தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டாருக்கான பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ 2000/-, 40 விழுக்காட்டிற்கு மேல் உடைய தொழுநோய் பாதிக்கப்பட்டாருக்கான பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ 2000/-, 40 விழுக்காட்டிற்கு மேல் உடைய முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கால்கள் செயல் இழந்தவர்கள் பார்கின்ஸன்ஸ் நோய் மற்றம் மல்டிபுல் ஸ்கிலரோசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்க ரூ.2000/-, உயர் பாதுகாப்பு தேவை உடைய கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்து கொள்ள ரூ.1000/-, மேற்காணும் பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் நலமுடன் உள்ளார் என சான்று ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், திருமண உதவி திட்டத்தின் கீழ் மாற்றுதிறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு பட்டம் மற்றும் பட்யம் படித்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் மற்றவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இலவச பயணச் சலுகை திட்டத்தின் கீழ் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் முழுவதும் அரசு பேருந்துகளில் சென்று வர இலவசப் பயணச்சலுகை, இருப்பிடத்திலிருந்து சிறப்பு பள்ளி கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு சென்று வர இலவசப்பயணச்சலுகை, மாற்றத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தமிழ்நாடு முழுவதும் வெளியூர் அரசு பேருந்துகளில் சென்று வர 75% பேருந்து சலுகை, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் துனையாளர் ஒருவருடன் வெளியூர் அரசு பேருந்துகளில் சென்று வர 75% பேருந்து சலுகை வழங்கப்படுகிறது. நலவாரிய சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து மரணம் ரூ.1.00 இலட்சம், விபத்து ஊனம் ரூ.25,000/- ஈமசடங்கு செலவுகள் மற்றும் இயற்கை மரணம் ரூ.17,000/-, கல்வி உதவித்தொகை ரூ.1,000 முதல் ரூ.6,000 வரை, திருமண நிதியுதவி ரூ.2,000, பெண் மாற்றுத்திறனாளிகளுக்கான மகப்பேறு / அறுவை சிகிச்சை ரூ.6000, கருச்சிதைவு கருக்கலைப்பிற்கான உதவி ரூ.3000, மூக்குக் கண்ணாடி செலவினம் ஈடு செய்தல் ரூ.500 மற்றும் மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, கால் தாங்கிகள் மற்றும் ஊன்றுகோல்கள், செயற்கை அவயங்கள், நவீன செயற்கை அவயங்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான மாற்றி வடிவமைக்கப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி, நடை பயிற்சி உபகரணம் (ரோலேடார் / கார்னர் சேர்), இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலி ( முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கால்கள் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்), பார்வையற்றவர்களுக்கான / கருப்பு கண்ணாடிகள் / மடக்கு குச்சிகள், பிரெய்லி கை கடிகாரங்கள், பார்வை திறன் குறைபாடுடையவர்களுக்கு உருபெருக்கி, ஸ்மார்ட் மடக்கு ஊன்றுகோல், காதுக்கு பின் அணியும் காதொலிக் கருவிகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடமாடும் சிகிச்சை பிரிவு மூலம் மறுவாழ்வுப் பணிகள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சிறகுகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தொடக்கம்” இயக்கத்தின் சார்பில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் பயின்று வரும் 30 மாற்றுத்திறனாளி மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து சிறப்பு கூட்டத்தில் விளக்க உரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் செ.பூபதி, மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செ.சதீஸ்குமார், முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரி முதல்வர் முனைவர் மா.கோவிந்தராசு, இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரி விலங்கியல் துறை இணைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் முதுமுனைவர் க.சர்மிளா பானு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ப.ஜனாகி, மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர் பிரகாஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவியர்கள் கலந்து கொண்டனர்.