ஆரணியில் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் மலிவு விலையில் உணவு தானியங்கள் விற்பனை துவக்கம்.
ஆரணியில் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு லிமிடெட் (NCCF) மூலம் மலிவு விலையில் உணவு தானியங்கள் விற்பனை துவக்கப்பட்டது.;
ஆரணியில் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு லிமிடெட் (NCCF) மூலம் மலிவு விலையில் உணவு தானியங்கள் விற்பனை துவக்கப்பட்டது. இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு லிமிடெட் (NCCF), மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மலிவு விலையில் தரமான தானியங்ளான அரிசி, பருப்பு வகைகள், மைதா, கோதுமை மாவு ஆகியவை விற்பனை செய்வதற்கு முகவர்களை நியமித்து மொபைல் வேன் மூலம் விற்பனை செய்ய ஆரணியில் இருந்து NCCF ன் சென்னை மேலாளர் ரோகித் மேட்டிக் என்பவர் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார். மேலாளர் ரோகித் மேட்டிக் செய்தியாளர்களிடம் கூறியது, இத்திட்டத்தின் மூலம் முக்கிய பொருட்கள் மற்றும் விலையானது பாரத் அரிசி (பச்சை அரிசி மற்றும் புழுங்கல் அரிசி இரண்டும்) மலிவு விலை கிலோவுக்கு ரூ.34க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பருப்பு ஒரு கிலோ ரூ.70ம், கோதுமை மாவு ஒரு கிலோ.ரூ. 30ம், ரவை ஒரு கிலோ ரூ.58 என நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை துவக்கப்பட்டது. மேலும் தற்போது திருவண்ணாமலை, வேலூ்ர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு முகவர்கள் நியமனம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் மொபைல் வேன் மூலம் மலிவு விலயில் உணவு தானியங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு நடைபெற்று வருகிறது என்று கூறினார். இத்துவக்க விழாவில் ஆரணி தொழிலதிபர் பி.என்.எம்.என்.குழுமத்தைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர்கள், ரோட்டரி சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.