இரு தங்க பதக்கத்தை வென்ற மனித உரிமை ஆய்வாளர்.

மதுரையில் நடைபெற்ற தடகள போட்டியில் 2 தங்க பதக்கத்தை மாநில மனித உரிமை ஆய்வாளர் வென்றுள்ளார்.

Update: 2025-01-04 05:15 GMT
42வது தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி ஜனவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று (3.1.25) நடைபெற்ற இப்போட்டியில் (சென்னை) மாநில மனித உரிமை ஆய்வாளர் காஞ்சனா 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஒரு தங்க பதக்கத்தையும், போல் வால்ட் போட்டியில் மற்றொரு தங்கத்தையும் வென்று சாதனை படைத்தார். இப் போட்டியில் 30 வயதிற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News