ஆரணி அருகே கந்துவட்டி கொடுமையால் தூக்கு மாட்டிக்கொண்டு நெசவாளர் சாவு.
ஆரணி அருகே கந்துவட்டி கொடுமையால் காமக்கூர் பகுதியை சேர்ந்த கிரி என்பவர் தூக்கு மாட்டிக்கொண்டு நெசவாளர் சாவு.;
ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கிரி(38) என்பவர் கைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி இந்திரா, மகன் விஷ்ணு(17) 12ம் வகுப்பும், மகள் துர்காதேவி(13) 8ம் வகுப்பும் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கிரி என்பவர் ஆரணி சைதாப்பேட்டை சேட்டு, இலுப்பகுணம் துணை தலைவர் அரசு, ஆரணி இந்திரா நகர் தினேஷ் ஆகியோரிடம் அதிக வட்டிக்கு பணம் பெற்றுக்கொண்டு வட்டி கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை அவருடைய மகன் மகளுக்கு வீடியோவில் நன்றாக படிக்கும்படி கேட்டுக் கொண்டு கந்துவட்டி கொடுமையால் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்தார். இது குறித்து கிரி மனைவி இந்திரா களம்பூர் போலீசில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.