அண்ணா பிறந்த நாளில் மினி மாரத்தான்

நாகர்கோவில்

Update: 2025-01-05 04:01 GMT
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் மினி மாரத்தான் போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு இன்று 5-ம் தேதி காலை தொடங்கியது. இதில் ஆண்கள் பெண்கள் என இரு பிரிவினரும் மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர்.       இப்போட்டியினை குமரி மாவட்ட கோட்டாட்சியர் காளீஸ்வரி கொடியை அசைத்து துவங்கி வைத்தார். இந்த போட்டியானது ஐந்து கிலோமீட்டர் தூரம் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில்  17 வயது முதல் 25 வயது வரையும், 25 முதல் 40 வயது வரையும் உள்ள இரு தரப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Similar News