வாழப்பாடி அருகே பெரியப்பாவை கொலை செய்த வாலிபர்

சேலம் மத்திய சிறையில் அடைப்பு

Update: 2025-01-05 04:03 GMT
சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 67). நிலத்தரகர். இவருடைய தம்பி மகன் செல்வராஜ் (30). பட்டதாரியான இவருக்கு. மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் செல்வராஜ் பலரிடம் பணம் வாங்கி மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் தனது பெரியப்பா பெரியசாமியிடம், மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், பெரியப்பா பெரியசாமியின் தலையை கத்தியால் அறுத்து கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் எனது பெரியப்பா பெரியசாமியிடம் மதுகுடிக்க பணம் கேட்டேன். அவர் கொடுக்க மறுத்து விட்டார். இதுதொடர்பாக அவருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்து இளநீர் வெட்ட பயன்படுத்தப்பட்ட கத்தியால் பெரியப்பாவின் தலையை வெட்டினேன். இதில் தலை துண்டாகி அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து விட்டார் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார், அவரை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News