குற்றாலநாத சுவாமி கோயில் திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்
திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் மாா்கழி திருவாதிரைத் திருவிழா சனிக்கிழமை காலை 5.20 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருள்மிகு நடராசா் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திர சபை அமைந்துள்ள குற்றாலத்தில், நடராசப் பெருமானுக்கு நடைபெறும் சிறப்புமிக்கது இத் திருவிழா. திருவாதிரை விழாவின் 5ஆம் நாளான ஜனவரி 8ஆம் தேதி தேரோட்டமும், 8ஆம் நாளான ஜனவரி 11ஆம் தேதி சித்திர சபையில் அருள்மிகு நடராசருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. விழாவில்10ஆம் நாளான ஜனவரி 13 ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு மேல் சித்திர சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், அதனைத் தொடா்ந்து 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது.