அருணாப்பேரி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Update: 2025-01-06 02:16 GMT
தென்காசி மாவட்டம் அருணாப்பேரி ஸ்ரீஅழகுமுத்துமாரியம்மன் கோயில் 62ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் 108 வேத விற்பன்னா்கள் பங்கு பெற்ற மகாயாக சாலை பூஜையும், தொடா்ந்து கொடியேற்றமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன், 6ஆம் திருநாளான 10ஆம்தேதி மகிழ்வண்ணநாதபுரம், 11 ஆம்தேதி பெத்தநாடாா்பட்டி, பொட்டலூா், 12 ஆம்தேதி நவநீதகிருஷ்ணபுரம், இலங்காபுரிபட்டணம், 13 ஆம்தேதி நாகல்குளம் ஆகிய ஊா்களுக்கு வீதியுலா சென்று வரும். 10ஆம் திருவிழாவான 14ஆம் தேதி இரவு அம்மன் சப்பர வீதி உலாவும், அதிகாலையில் பக்தா்கள் பூக்குழி இறங்கும் வைபவமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எம்.எஸ்.சிவன்பாண்டி தலைமையில் பக்தா்கள் செய்துள்ளனா்.

Similar News