தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்!
குடியாத்தத்தில் திமுக சார்பில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ நந்தகுமார் கலந்து கொண்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம், நகர செயலாளரும், நகரமன்ற தலைவருமான எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் ஜி.எஸ்.அரசு, நகர நிர்வாகிகள் நெடுஞ்செழியன், ஜம்புலிங்கம், மனோஜ், வசந்தா, பாரி, கோட்டீஸ்வரன், தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், புவியரசி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., குடியாத்தம் தொகுதி பார்வையாளர் டேம் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு வாக்குச்சாவடி பாக முகவர்கள் செய்ய வேண்டிய தேர்தல் பணி குறித்து ஆலோசனை வழங்கினார்கள். கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவீன்சங்கர், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சி.என்.பாபு, நகர இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ்.குகன், நகரமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.