மூதாட்டியிடம் செயினை பறித்தவர் கைது
திண்டுக்கல்லில் மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் கழுத்தில் அணிந்து இருந்த தங்க செயினை பறித்து சென்ற முன்னாள் ராணுவ வீரர் கைது
திண்டுக்கல் நாகல்நகர் பகுதியை சேர்ந்த அழகம்மாள்(70) இவரிடம் மர்மநபர் முகவரி கேட்பது போல் சென்று 2 பவுன் தங்க செயினை பறித்து சென்றது தொடர்பாக நகர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில், ASP. சிபின் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்புஆய்வாளர் முத்துக்குமார், நகர் குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா,முகமதுஅலி, விசுவாசம்,சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி ஆகியோர் உதவியுடன் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட பாலகண்ணன்(43) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பாலகண்ணன் முன்னாள் ராணுவ வீரர், மேலும் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.