கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

Update: 2025-01-06 05:44 GMT
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது மரியநாதபுரம், செட்டிகுளம் அருகே கஞ்சா விற்பனை செய்த அனுமந்தநகர் பகுதியை சேர்ந்த தர்மர் மகன் சுரேஷ்குமார்(27) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News