கோவை: இறுதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர்!

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முன்பு இன்று வெளியிட்டார்.

Update: 2025-01-06 05:51 GMT
கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர் நீக்க, முகவரி மாற்றம் திருத்தம் செய்யும் பணிகள் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 1,44,000 மனுக்கள் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் பெறப்பட்டு, அந்த மனுக்கள் பரிசீலனை புக்மார்க் செய்யப்பட்டு, கலாய்வு மேற்கொள்ளப்பட்டு, உறுதியான தகவல்களை இறுதி செய்து அவற்றை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் பிரிவு பணியாளர்கள் மேற்கொண்டனர்.இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முன்பு இன்று வெளியிட்டார். வரைவுப் பட்டியலின் படி, மாவட்டத்தில் மொத்தம் 31,85,554 உள்ளனர். அதில் 15,58,673 ஆண் வாக்காளர்கள், 16,26,259 பெண் வாக்காளர்கள் மற்றும் 657 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.இதில் மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 10 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 31,85,554 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News