மத்திபாளையம்:பேருந்து இல்லாமல் தவித்த மக்களுக்கு பேருந்து !

மத்திபாளையம் பகுதியில் இரண்டு பேருந்துகள் இயக்க கோவை அரசு பேருந்து போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவு.

Update: 2025-01-06 06:00 GMT
கோவை மாவட்டம், மத்திபாளையம், தென்னனூர், கிருஷ்ணராயபுதூர் உள்ளிட்ட கிராம மக்கள் பேருந்து இல்லாமல் கடும் அவதிக்குள்ளான நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.கொரோனா காலத்திற்கு முன்பு நான்கு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதனால் வேலைக்குச் செல்வோர், மாணவர்கள் என அனைவரும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சிறுவாணி சாலையில் பேருந்து பிடிக்க வேண்டிய அவல நிலை இருந்தது.இந்த பிரச்சனை குறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், சுங்கம் பேருந்து டெப்போவில் இருந்து இரண்டு பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்ட நிலையில், ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.இதையடுத்து, சுங்கம் பேருந்து டெப்போ மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, மத்திபாளையம் பகுதியில் இரண்டு பேருந்துகள் இயக்க கோவை அரசு பேருந்து போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Similar News