தேசிய மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மின்சார வாரியம் சார்பில், தேசிய மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜனவரி 06 இன்று காலை 10 மணி அளவில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தேசிய மின்சார மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பின்னணியில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஐஏஎஸ் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் இந்த பேரணியில் மின் கம்பங்களில் பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது. மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது. அதிக சுமை மற்றும் பெரிய ஏணி உடைய கனரக வாகனங்களை மின்பாதைக்கு அடியில் ஓட்டிச் செல்லக்கூடாது. மின்வேலி அமைத்தால் உயிரிழப்பு ஏற்படும் என்பதால் அதனை கட்டாயம் செய்யக்கூடாது. மேலும் அதற்கு குற்றவியல் தண்டனையும் வழங்கப்படும். என்பது உள்ளிட்ட பல்வேறு மின் விழிப்புணர்வு வாசகங்களை கைகளில் ஏந்தி கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் தர்மபுரி நான்கு ரோடு வரையில் விழிப்புணர்வு பேரணியாக சென்றனர்.