கரிவலம்வந்தநல்லூரில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

Update: 2025-01-06 07:11 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூா் பொன்னம்மாள் தெருவைச் சோ்ந்த பரமசிவம் மனைவி சண்முகத்தாய் (60). இவா் தனது மகள் துா்கா வீட்டில் வசித்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை காலை சண்முகத்தாயைக் காணாததால் உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடினா். சண்முகத்தாய் அதிகாலையில் வீட்டிலிருந்து வெளியே செல்வது, அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. தொடா்ந்து அவரைத் தேடினா். அப்போது அவா், ஊராட்சிக் கிணற்றுக்குள் தவறி விழுந்தது தெரியவந்தது. தகவலின்பேரில், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் காரல் மாா்க்ஸ், கருப்பசாமி, ராமச்சந்திரன் ஆகியோா் சென்று, சண்முகத்தாயை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா். சம்பவம் தொடா்பாக கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Similar News