இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு

இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு;

Update: 2025-01-06 13:10 GMT
நெல்லையில் இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் கைது செய்யப்பட்டதை கண்டித்து அருப்புக்கோட்டையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பு; நீதிமன்ற அனுமதியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் மாவட்டச் செயலாளர் பேட்டி நெல்லையில் கருத்தடை சாதனம் பொருத்துவது குறித்து கருத்து தெரிவித்திருந்த இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சிவன் கோவில் சந்திப்பு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவன் கோவில் சந்திப்பு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்து முன்னணி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் சிவன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள் குற்றாலநாதன் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.‌ இதற்கு பாடம் புகட்ட வேண்டுமென சிவன் கோவிலில் பிரார்த்தனை செய்தோம் விரைவில் நீதிமன்ற அனுமதியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். பேட்டி : இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு

Similar News