தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம்
தர்மபுரி நகராட்சி மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமையில் நகர மன்ற கூட்டம்
தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது இதில் நகராட்சி ஆணையர் சேகர், துணைத் தலைவர் நித்யா அன்பழகன் நகர்மன்ற உறுப்பினர்கள் தண்டபாணி அலமேலு சக்திவேல் நாகராஜ் முன்னா மாதேஷ் ராஜாத்தி சத்யா கார்த்திக் செல்வி மாதேஸ்வரன் வாசுதேவன் பாலசுப்பிரமணி நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் தெருவிளக்கு சரியாக எரிவதில்லை இதனால் தர்மபுரி உழவர் சந்தை அருகில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றது.எனவே நகராட்சி பகுதி இருக்கும் மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று நகர்மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் தெரிவித்தார். கடைவீதி பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது அதை சரி செய்ய வேண்டும். கடைவீதி பகுதியில் பொதுக் கழிப்பிடம் அமைக்க வேண்டும் என்று நகர மன்ற உறுப்பினர் நாகராஜ் தெரிவித்தார். ஏழாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் சத்திய கார்த்திக் தங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் முறையான வழங்குவதில்லை அதே போல் தெருவிளக்கு எரிவதில்லை ஆழ்துளை கிணறு அமைத்து பகுதிகளுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். தர்மபுரி பேருந்து நிலையத்தில் தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பு உள்ளது நகராட்சி நிர்வாகம் அதை அகற்ற வேண்டும் என்று பல்வேறு பிரச்சினைகளை நகர்மன்ற தலைவரிடம் நகர் மன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.