இந்திய விமானப்படை ஆள் சேமிப்பில் மெடிக்கல் அசிஸ்டன்ட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
இந்திய விமானப்படை ஆள் சேமிப்பில் மெடிக்கல் அசிஸ்டன்ட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
இந்திய விமானப் படை ஆள்சேர்ப்பில் மெடிக்கல் அஸிஸ்டெண்ட் தேர்வு பற்றிய அறிவிப்பு இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு 07.01.2025 முதல் 27.01.2025 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு திருமணமாகாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம மருத்துவ உதவியாளர் பொது விண்ணப்பதாரர்களுக்கு 29.01.2025 அன்றும், மருத்துவ உதவியாளர் மருந்தாளர் விண்ணப்பதாரர்களுக்கு 04.02.2025 அன்று நடைபெறவுள்ளது.இத்தேர்வுக்கு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் தேர்ச்சி அல்லது மூன்று வருடம் டிப்ளோ என்ஜீனியரிங் துறையில் 50 சதவீதம் தேர்ச்சி அல்லது 2 வருடம் கணிதம் மற்றும் இயற்பியல் தொடர்பான தொழில்துறையில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடல்தகுதியாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 152 செ.மீ ஆகவும் மற்றும் உடலுக்கேற்ற எடை இருத்தல் அவசியம். பணியிடத்திற்கு மேற்கண்ட தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வினில் முதல் தகுதிச்சுற்று ஆன்லைனில் கொள்குறித்தேர்வாகவும் தகுதிச்சுற்று உடற்தகுதித் தேர்வாகவும் நடைபெறும். சம்பளமாக முதல் வருடம் 30,000-லிருந்து நான்காம் வருடம் 40,000 வரை வழங்கப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.550 ஆன்லைனில் செலுத்த வேண்டும். இதில் தகுதியுள்ள பெண்கள் / ஆண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்